டிக் டாக்கிற்கு மாற்றாக ஆதிக்கம் செலுத்தும் 3 செயலிகள்

0
40

இந்திய சீன எல்லையில் போர பதற்றம் அதிகரித்த நிலையில், சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் #BoycottChina என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் மத்திய அரசு அதிரடியாக சீனாவை அடிப்படையாக கொண்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்திய பயனர்களின் தகவலை சீன கணிப்பொறிகளில் சேமித்து வைப்பதன் காரணமாக அந்த செயலிகளை தடை செய்வதற்கான காரணமாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த செயலிகளில் முக்கியமாக இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தும் டிக் டாக்கும் இடம் பிடித்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதன் பயனர்கள் அதற்க்கு மாற்றாக Dubmash, instagram உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வந்தாலும், தற்போது டிக் டாக்கிற்கு மற்றாக 3 செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை என்னென்ன செயலிகள் என பார்ப்போம்.
Roposo (ரொபோசோ) :

இந்த செயலி தான் தற்போது டிக் டாக்கிற்க்கு மாற்றான இலவச செயலியில் முதலிடம் பிடித்துள்ளது. கூகுள் ப்ளே மற்றூம் ஆப்பிள் ஸ்டோர் இரண்டிலும் இருக்கும் இந்த செயலி, கடந்த இரண்டு தினங்களில் கூகுள் ப்ளேவில் மட்டும் 50 மில்லியன் டவுன்லோட்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு ரேடிங்காக 4.5 புள்ளிகளை பயனர்கள் அளித்துள்ளனர்
Chingari (சிங்காரி):

சமூக ஊடக பிரிவின் கீழ் 4.1 மதிப்பீட்டில் சிங்காரி முதலிடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ‘சிறந்த இலவச பயன்பாடுகள்’ பிரிவின் கீழ் 2 வது இடத்திலும் உள்ளது.

கூகிள் பிளே ஸ்டோரில், சிங்காரி பயன்பாட்டின் மதிப்பீடு 4.5 புள்ளிகள் மற்றும் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பதிவு செய்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் ‘சிறந்த இலவச’ பயன்பாடுகள் பிரிவின் கீழ் சிங்காரி 2 வது இடத்தில் உள்ளது.
Mitron (மித்ரோன்) :

கடந்த சில மாதங்களாகவே இந்த செயலி குறித்த தகவல் வந்த வண்ணம் இருந்தன. இந்தியாவில் டிக் டாக்கிற்க்கு மாற்றாஅக இந்த செயலி உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது பாகிஸ்தான் செயலியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி குகூள் இந்த செயலியை தங்கள் தளத்திலிருந்து நீக்கியது. இதனையடுத்து மீண்டும் இந்த செயலியை ஆரம்பத்திலிருந்து உருவாக்கி இதனை மீண்டும் நிறுவினர்.
மித்ரோன் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ‘சிறந்த இலவச பயன்பாடுகள்’ பிரிவில் 4.5 புள்ளிகளை கொண்டு 4-வது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சமூக ஊடக வலையமைப்பு பயன்பாட்டில் 2வது இடத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

READ
3330 ரூபாய்க்கு அறிமுகமாகும் நோகியா 5310 - சிறப்பு அம்சங்கள் என்ன?

பிளே ஸ்டோரில், மித்ரோன் பயன்பாடு 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் சராசரியாக 4.5 புள்ளிகள் மதிப்பீட்டைக் கொண்ட ‘சிறந்த இலவச’ பயன்பாடுகள் பிரிவில் 4 வது இடத்தில் உள்ளது.