இந்தியாவில் Google Pay தடை செய்யப்பட்டுள்ளதா? – உண்மை என்ன?

0
144

இந்தியாவில் பல கோடி பேர் தினசரி பயன்படுத்தும் செயலியாக கூகுள் பே உள்ளது. இந்த நிலையில், கூகுள் பே செயலி, மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை மற்றும், அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ரிசர்வ் வங்கி தரப்பில், கூகுள் பே, எந்தப் பணப்பரிமாற்ற அமைப்பையும் கொண்டிருக்கவில்லை, மாறாக, இது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலியே என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
”தங்களது செயலியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்ய தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும், அதற்கு அனுமதி பெற தேவையில்லை என்றும், அதனாலேயே என்பிசிஐ வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் கூகுள் பே இடம்பெறவில்லை” என்று கூகுள் பே விளக்கம் அளித்ததுள்ளது.
இந்த நிலையில், ’கூகுள் பே’ செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல்கள் பரவுகின்றன.

ரிசர்வ் வங்கியானது கூகுள் பே செயலிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. மற்ற செயலிகளைப் போல கூகுள் பே செயலியில் பணத்தை அனுப்புவது பாதுகாப்பான ஒன்றே. எந்த ஆபத்தும் இல்லை என்பதே உண்மை நிலை ஆகும்.
READ
அசத்தலான பாதுகாப்பு அம்சத்தை சோதித்து வரும் ஃபேஸ்புக்