ஆற்று மணலில் புதைந்திருந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு

0
9

நெல்லூர் அருகே மணல் அள்ளும் பணியில் ஈடுபட்ட போது மணலுக்குள் புதைந்திருந்த பழமையான சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் பெரமாலபாடு கிராமம் அருகே பெண்ணா நதியில் இன்று மணல் அள்ளும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணலுக்குள் பழமையான சிவாலயம் ஒன்று புதைந்து கிடப்பது தெரியவந்தது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு நதியில் புதைந்து கிடந்த சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த தொல்பொருள் ஆய்வு துறையினர் அங்கு சென்று சிவாலயத்தை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

READ
வாசற்படியில் எத்தனை படி இருந்தா? எத்தனை பலனா?