யார் காலில் விழலாம்? யார் காலில் விழக் கூடாது? – பிரபல ஜோதிடரின் எளிய விளக்கம்

0
18

 

இந்திய நாட்டில் நம்மை விட வியதில் பெரியர்வர்களில் காலில் விழுந்து ஆசி பெறுவது சிறு வயதிலிருந்தே ஏற்படுத்தப்படும் பழக்கம். அப்படி ஆசி பெறும் போது ஆயுள் ஐஸ்வரியத்துடன் நன்றாக இருப்போம் என்பது நம்பிக்கை.

ஆனால் அப்படி யார் காலில் வேண்டுமானாலும் விழக் கூடாது எனவும், யாரிடமெல்லாம் அவ்வாறு ஆசி பெறலாம் என பிரபல் ஜோதிடரான பாலாஜி ஹாசன் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் கூறியிருப்பதாவது.

பாத ஆசீர்வாதமும் – ஆயுள் விருத்தியும் :- ஆயுள் விருத்தி ( 8 ஆம் பாவம் )

பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது விவிலியம் ( The bible )

மனிதன் செய்கின்ற பாவம் கர்மங்கள் அவனது எட்டாம் இடத்திலும் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடமான மூன்றாம் பாகத்திலும் சேர்கின்றன. ஜோதிடத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் எனப்படுகிறது.

எட்டுக்கு எட்டாம் இடமான மூன்றாம் பாவமும் ஆயுள் ஸ்தானம் ஆயில் ஸ்தானபலம் ( Life Span) எனப்படுகிறது எட்டாம் பாவமானது ஒன்பதாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக அமைகிறது. பன்னிரண்டாம் பாவம் ஒருவரின் பாதங்களை குறிக்கும். 

ஒன்பதாம் பாவம் பெற்ற தந்தையை மற்றும் பாடம் சொல்லிக்கொடுத்த குருநாதரை குறிக்கும் பாவம். எனவே எட்டாம் பாவம் தந்தை மற்றும் குருநாதரின் பாதங்களை கூறுகின்றன.
மூன்றாம் பாவம் நாலாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவம். அதாவது தாயாரின் பாதங்களை குறிக்கின்றன எனவே மாதா பிதா குரு இவர்கள் 3 வாழும் தெய்வங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதால். நம் பாவம் குறைந்து அவர்களின் ஆசீர்வாதத்தால் நம் ஆயுள் விருத்தி அடையும் என்பது ஜோதிட நடைமுறைப் எளிய பரிகாரம்

எனவே பிறந்தநாள், நீண்ட தூரம் செல்லக்கூடிய புனித தலங்களுக்கு செல்லும் முன் ( Ex ., Thirupathi., sabari Mala., Kaasi), முக்கியமான தேர்வு (TNPSC ., Public exams , Interview ), உடல் நோய்க்காக மருத்துவம் செல்லும் முன் தாய் , தந்தை, குருநாதர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கி சென்றால் ஆயுள்பலம் விருத்தி அடையும் செல்லும் காரியம் முழுமையாக நிறைவேறும்.

சரி இன்றைய நடைமுறைக்கு வருவோம். அரசியலில் இருப்பவர்களுக்கு தனது தலைவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டியது ஒரு கட்டாயம் ஆகிறது. மற்றும் சிலருக்கு அவர் துறை சார்ந்த நபர்களின் காலை பிடிப்பது அத்தியாவசியமாகிறது.
அப்படி நாம் செய்யலாமா ?? யார் காலில் விழ வேண்டும்??

  • பெற்ற தாய், தந்தை
  • பாடம் ( கல்வி ) கற்றுக்கொடுத்த குருநாதர்கள்
  • அல்லது நமக்கு ஏதேனும் ஒரு தொழில் ,வித்தை, வேதம், கலை கற்றுக் கொடுத்த குருநாதர்கள்
  • தீர்த்த யாத்திரைக்காக நமக்கு மாலை போடும் குருநாதர்கள்
READ
விஜய் சேதுபதியின் நாயகிக்கு டும்...டும்...டும்

உதாரணம் :-

  • சபரிமலை குரு நாதர்கள்
  • திருப்பதி செல்லும் முன் நமக்கு மாலை அணிவிக்கும் குருநாதர்கள்
  • நமக்காக கன்னிகா தானம் செய்த பெண்ணின் தாய் தகப்பன் (மாமனார் , மாமியார்)
  • பெண்ணுக்கு மணமகனின் தாய் தகப்பன் (மாமனார், மாமியார்)
  • பரதேசி அதாவது திருமணம் செய்யாமல் தனக்கு என்று உறவும் ., எந்த உடைமையும் இலாமல் சிவனே கதி என்று வாழும் அகோரிகள்.

இவர்கள் காலில் மட்டுமே விட வேண்டும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம்.
அரசியல்வாதிகள் தனக்கு மேலதிகாரிகள் அல்லது வயதானவர்கள் காலில் விழலாமா??

அவர்கள் நல்லவர்களா என்று சிந்தியுங்கள் அவர் காலில் விழுந்தால் அவர்களின் பாவம் உங்களுக்கு வரும்.

ஒருவர் காலில் விழுவது அவர்கள் புனிதமானவர்கள் இருக்கவேண்டும். இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் உயர்ந்த பெரிய பிரபலங்கள் பெரிய மனிதர்கள் வயதில் மூத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் காலில் விழுவதை தவிர்த்துவிடுங்கள். இல்லை அது நல்லது தான் என்று உங்கள் மனதிற்கு தோன்றினால் அவர்கள் நல்லவர்களா என்று சிந்தியுங்கள் இல்லையென்றால் அவர்கள் பாவத்தை நீங்கள் பெறுவதற்கு சமம்.

இந்தக் கருத்தை எனது குருநாதர் சித்தயோகி சிவதாசன் அவர்கள் பரிகார சூட்சமம் எனும் வகுப்பில் நான் கேட்ட கதை இன்று உங்களுக்கு சொல்கிறேன். கடந்த சில தினங்களாக அவரது குரல் ஒலி வகுப்பில் பதிவு செய்ததை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

கதையின் கரு ( Moral) : கண்டவன் காலில் எல்லாம் விழாதே