காரிய சித்தி உண்டாக பரிகாரம் – ஜோதிடர் பாலாஜி ஹாசன்

0
357

ஒரு முக்கிய காரியத்தை தொடங்குவதற்கு முன் இஷ்ட தெய்வத்திற்கு பொங்கலிட்டு படையல் போட்டு வணங்கிய பின் காரியத்தை தொடங்கினால் தொடங்கிய காரியத்தில் வெற்றி உண்டாகும்.

உதாரணம் :-
எங்கள் சேலத்தில் ஒரு பழக்கம் உண்டு

அதாவது ஒரு வீடு கிரகப்பிரவேசம் செய்து
அங்கு வசிப்பதற்கு முன்பாக மாரியம்மன் கும்பிடுதல் என்று வீட்டில் தெய்வத்தை வைத்து வழிபடுவர்.

திருமணம் உறுதியாகி திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்பு வீட்டில் மாரியம்மன் கும்பிடுவது என்று தாலியை வைத்து படைப்பார்கள்

இவ்வாறாக உங்களுக்கு இஷ்ட தெய்வம்
எதுவோ அந்த இஷ்டதெய்வத்தை ஒன்றைத் தேர்ந்தெடுத்து
ஒரு முக்கியமான உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தரக்கூடிய காரியம்

* திருமணம்
* குழந்தை முயற்சி
* வீடு கட்டுதல்
* நிலம் வாங்குதல்
* வாகனம் வாங்குதல்
* நோய்க்கு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதற்கு முன்பு
* ஒரு ஒப்பந்தம் விஷயமாக மேலதிகாரியை சந்திப்பதற்கு முன்பு
*இன்டர்வியூ
* முக்கிய தேர்வுகளுக்கு செல்லும்

முன்பு இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சென்றால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

READ
40 வருடங்களுக்குப் பின். வெளிவரும் அத்தி வரதரை தரிசிக்க. தயாராகிறது காஞ்சி!